கொல்கட்டா ஈடன் கார்டனில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது.டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆரம்ப ஆட்டக்காரர் லின் 10 (10) நிலைக்கவில்லை. அடுத்து அதிரடியில் இறங்கிய நரைன் 24 (9) ரன்கள் எடுத்து வெளியேறினார். ராபின் உத்தப்பா மற்றும் நிதிஷ் ராணா அதிரடியில் இறங்க, ராணா 7 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரி விளாசி 63 (34) ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய ரசல் உத்தப்பாவுடன் ஜோடி சேர இருவரும் அதிரடியில் இறங்கினார். ரசல் 17 பந்துகளில் 48 ரன்கள் விளாச, உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தனர்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கட்டா 218/4 ரன்கள் குவித்திருந்தது.
219 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீர் ராகுல் 1 (5) நிலைக்கவில்லை. 13 பந்துகளில் 2 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரி அடித்த க்ரிஸ் கெய்ல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் அதிரடி காட்ட 58 (37) ரன்கள் எடுத்தார். சர்ஃபராஸ் கான் 13 (13) நிலைக்கவில்லை. மில்லர் 59 (40) ரன்கள் எடுத்தார்.இறுதியில் பஞ்சாப் அணி போராடி 20 ஓவர்கள் முடிவில் 190/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இறுதியில் கொல்கட்டா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.