mumbai indians vs bangalore royal challenge

IPL 2019: கடைசி ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி!

நேற்று இரவு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை அணியின் ரோகித் மற்றும் டி.காக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின், டி.காக் 23 (20) சஹல் பந்தில் போல்டானார். ரோகித் தன் பங்கிற்கு 8 பவுன்டரி மற்றும் 1 சிக்ஸ் அடித்து 48 ரன்கள் எடுத்த போது, 87/2 என்ற நிலையில் அவுட்டானார்.

சூர்யகுமார் யாதவ் 38(24) ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 3 பநதுகளில் 3 சிக்ஸர் அடித்து வானவேடிக்கை காமித்தார். 4வது பந்திலும் சிக்ஸ் அடிக்க முயன்றவர், 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த போது கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பொல்லார்ட் 5(6) மற்றும் குர்னல் பாண்டியா 1(2) நிலைக்கவில்லை. அடித்து வந்த ஹர்திக் பாண்டியா அதரடியில் இறங்கினார். 3 சிக்ஸ் மற்றும் 2 பவுன்டரிகள் அடித்து 32 ரன்கள் (14) எடுத்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 187/8 ரன்கள் குவித்தது.அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணியின் மொயின் அலி 13(7) நிலைக்கவில்லை. பார்த்திவ் படேல் அடித்து ஆட 4 பவுன்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து, 31 (22) ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின் ஜோடி சேர்ந்த விராட் மற்றும் டி.வில்லியர்ஸ் அதிரடியில் இறங்கினர். கோலி 6 பவுன்டரி விளாசி 46(32) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த முனையில், அதிரடியில் இறங்கிய டி.வில்லியர்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து 70 (41) ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை.


இறுதி ஓவரில் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், மலிங்கா ஓவரில் ரன் எடுக்க முடியாமல் தினரினார் வில்லியர்ஸ். கடைசியாக 20 ஓவர்கள் முடிவில், 181/5 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி தோல்வி அடைந்தது.இறுதியில், மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.