இங்கிலாந்து வீரர் மைக்கல் வான்னுக்கும், நடிகர் சதீஷ்கும் இடையே மோதல்

IPL 2019: இங்கிலாந்து வீரர் மைக்கல் வான்னுக்கும், நடிகர் சதீஷ்கும் இடையே மோதல்!

விராட் கோலிக்கு, உலக கோப்பைக்காக ஓய்வு அளிக்க வேண்டும் என இங்கிலாந்த் வீரர் மைக்கல் வான், அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.நடந்து வரும் 2019ம் ஆண்டு IPL போட்டிகளில், விராட் கோலியின் தலைமையிலான பெங்களூர் அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்த தோல்விகள், விராட் கோலியின் மனதை பாதிக்கலாம், தலைமை பணியின் மேல் விரக்தி வரலாம், தன்னம்பிக்கை குறையலாம், இதனால் உலக கோப்பை போட்டியை எதிர் கொள்ளவிருக்கும் விராட் கோலி சற்று தளரலாம், என்பதால் பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.அந்த வரிசையில், இங்கிலாந்து அணியின் முன்னால் கேப்டன் மைக்கல் வான், “இந்தியா சமயோஜிதமாக திட்டமிட்டு, வரவிருக்கும் உலகக் கோப்பைக்காக இப்போதே கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி என்பதால் அதற்கு முன்பாக, அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும்” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் சதீஷ், அன்புள்ள வான் அவர்களே, இந்தத் தோல்வி எங்கள் ஸ்கிப்பர் கோலியை சோர்வடையச் செய்துவிடாது.எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவரோடு எங்கள் ‘தல தோனி’ உள்ளார். அதனால், நீங்கள் உங்கள் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவது நலம் என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு வான், “சதீஷ், நான் ஒரு சிறு அறிவுரை கொடுக்கவே முயன்றேன். நிறைய விளையாடும் நபர் ஒருவர் ஆண்டில் ஒருமுறையேனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இரண்டு வாரமாவது ஓய்வு எடுக்கலாம். அதுவும் RCB -யால் சரியாக விளையாட முடியாத சூழலில் அவர் எடுத்துக் கொள்ளலாம். விராட் கோலியும் மனிதர் தான். அவருக்கும் சில கவனிப்புகள் தேவைப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

சதீஷ் விடாமல், “வான், உங்கள் அக்கறையை ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் எங்கள் ஸ்கிப்பர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் போலவே இந்த தோல்வி, அவர் உற்சாகத்தைக் குறைக்காது, என்றும் நம்புகிறோம். கோலி, வியக்கதகு வலிமை கொண்டவர்” என்று அதற்கு மீண்டும் ஒரு பதிலை பதிவிட்டிருந்தார்.
இவர்கள் உரையாடல், ட்விட்டரில் பலராலும் ஆதரிக்க பட்டு வருகிறது.