உலக கோப்பை கிரிக்கெட் – இங்கிலாந்து சென்ற இந்திய அணி

251

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டு வருகிற 30ம் தேதி இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி ஜூலை 14ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்பட மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடவுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி ஆடவுள்ளது. அந்த போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்நிலையில், இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று நள்ளிரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் இங்கிலந்து நாட்டுக்கு புறப்படு சென்றனர்.

பாருங்க:  உலக கோப்பையில் விளையாடுவாரா ஜாதவ்? ரிஷப் பண்ட் அல்லது ராயுடு, வாய்ப்பு யாருக்கு?