யாருக்குக் கோப்பை – நாளை ஆஸ்திரேலியா & இந்தியா பலப்பரிட்சை !

யாருக்குக் கோப்பை – நாளை ஆஸ்திரேலியா & இந்தியா பலப்பரிட்சை !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நாளை நடக்க இருக்கிறது.

பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதனால் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாண்டு அதிகப் புள்ளிகள் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.

மற்றொரு புறம் தென் ஆப்பிரிக்க அணியோடு அரையிறுதியில் மோதிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கிறது. சமபலம் கொண்ட அணிகள் மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.