இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா மோதல் : ஸ்டெயின் விளையாட மாட்டார்

227
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதல்

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேல் ஸ்டெயின் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், உலக கோப்பை போட்டியில் அனைத்து நாடுகளும் விளையாடுவதால் அனைத்து நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் இந்த விளையாட்டு போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது.

இந்நிலையில், கடந்த ஐபில் கிரிக்கெட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

பாருங்க:  கோட் சூட்டில் டிப் ஆப் எடப்பாடி பழனிச்சாமி - வைரல் புகைப்படங்கள்