சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில்

3 கேலரிகளை திறக்க கோரி ரசிகர்கள் வேண்டுகோள்!

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மூன்று கேலரிகளை திறக்க கோரி சென்னை ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதலாக ஐ, ஜே, கே என மூன்று பெவிலியன்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டமைத்தது.

12 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மூன்று பெவிலியன்களும் அமைக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முறையான அனுமதியை அரசிடம் பெறவில்லை எனவும் விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டவை எனவும் கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிகள் காவிரி பிரச்சனைகளால் சென்னையில் நடக்கவில்லை. அதனால், இந்த ஆண்டு நடக்கவுள்ள போட்டிகளுக்காக ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. எனிலும், டிக்கெட் கிடைக்காமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே, அந்த மூன்று கேலரிகளையும் திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சொல்லி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.