4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள், வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் டி-20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள், ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார்கள்.
கடந்த 2010, 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் சேர்க்கப்பட்ட நிலையில், பல்வேறு சர்வதேச போட்டிகளின் காரணமாக 2018 ஆம் ஆண்டு, ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.
ஆனால் கிரிக்கெட்டை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த நிலையில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் வரும் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடக்கவுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க முடிவு செய்துள்ளது.
ஆனால் அதில் இடம்பெறுவது ,50 ஓவர் போட்டியா? அல்லது டி-20 போட்டியா? என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. அது டி-20 போட்டி தான் என்று இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.