IPL 2019 News in Tamil
2019 ஐபிஎல் போட்டி நிறைவு – கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ்
இரண்டு மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது.
20 ஓவர் பந்துகள் நிர்ணயிக்கப்பட்டு விளையாடும் கிரிக்கெட் போட்டி என்பதால் ஐபிஎல் போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அனைத்து நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சமமாக பங்கிட்டு நடைபெறும் இந்த போட்டி விறுவிறுவென நடைபெறும் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.
ஐபிஎல் போட்டியில் இந்த முறை 8 அணிகள் பங்கேற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இரு அணிகளுமே மூன்று முறை கோப்பை கைப்பற்றியிருந்ததால், 4வது முறையாக எந்த அணி கோப்பையை வெல்லும் என்கிற எதிர்ப்பு கிரிக்கெட் ரசிகர்ளிடையே எழுந்தது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடக்க வீரர்கள் அதிக ரன்கள் எடுக்காமல் அவுட் ஆனார்கள். ஆனாலும் வாட்சனும், டுப்ளஸிஸூம் மாற்றிக்காட்டினர்.
தோனி ரன் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் ரன் அவுட் ஆகவில்லை. அம்பையர் தவறான முடிவை அறிவித்துவிட்டார் என்பது பின்னர் தெரியவந்தது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தை அளித்தது. 80 ரன்கள் எடுத்த நிலையில், வாட்சன் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.
இறுதியில் ஒரு பந்துக்கு 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் எல்பிடபிள்யூ ஆனார். எனவே, ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. எனவே, மும்பை இந்தியன்ஸ் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
