2019 உலக கோப்பைத் தொடர்; இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்!

376

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பைத் தொடர் இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றர்.அதற்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2019 உலக கோப்பைத் தொடர் 02

இந்த புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதரபாத்தில் நேற்று நடைப்பெற்றது.இதில் இந்திய வீரர்கள் தோனி, விராட் கோலி, ரஹானே மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த புதிய ஜெர்சி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது, இதுவரை இந்திய அணி வென்றுள்ள 3 உலக கோப்பைத் தொடரின் தேதிகள் ஜெர்சியின் உட்புரத்தில் பொரிக்கப்பட்டுள்ளது.

2019 உலக கோப்பைத் தொடர் 01

அதாவது 2 உலக கோப்பை மற்றும் 1 டி-20 உலக கோப்பை வென்ற தேதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஸ்கோர்கள், விளையாடிய மைதானத்தின் விபரங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் 3 வெற்றியைக் குறிக்கும் வகையில் மூன்று ஸ்டார்கள் இடம் பெற்றுள்ளன. இறுதியில் “ப்ளீட் புளு” (bleed blue) என்னும் வாசகமும் இடம் பெற்றுள்ளது.மேலும் இந்த ஜெர்சி மறு சுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டரால் தயாரிக்கப்பட்டது.

இது குறித்து தோனி மற்றும் விராட் கோலி கருத்து தெரிவித்தள்ளனர்.விராட் கோலி கூறுகையில், கடந்த உலக கோப்பை தொடரில், நான் அணிந்த ஜெர்சிகளிள் இதுவே சிறந்தது என்றார், மேலும் இதனை அணிய ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து தோனி கூறுகையில், இதில் இடம் பெற்றுள்ள 3 ஸ்டார்கள், வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என கூறியுள்ளார்.

பாருங்க:  உலக கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்து சென்ற இந்திய அணி