12-வது ஐ.பி.எல் கொண்டாட்டம் – டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

370

இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டிகள் வருடந்தோரும் இந்தியாவில் நடைப்பெறும். 12-வது ஐ.பி.எல் போட்டி வரும் மார்ச் 23 ம் தேதி தொடங்குகிறது.

இதில் முதல் போட்டியில் ‘தல தோனி’ யின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத இருக்கிறது.முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற உள்ளது.

இதற்காக டிக்கெட்கள் இன்று(மார்ச் 1 ) காலை 11.30 மணியில் இருந்து நேரடி கவுன்டரில் விற்பனை ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதை அடுத்து நேற்று இரவிலிருந்தே ரசிகர்கள் கூட்டம் டிக்கெட் வாங்க குவிந்துள்ளது.

ஆயிரத்து ஐநூறு (Rs.1500 ) முதல் ஆராயிரத்து ஐநூறு (Rs.6500) வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, போட்டியின் காரணமாக பயிர்சி மேற்கொள்ள தோனி உள்ளிட்ட வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.

பாருங்க:  இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா மோதல் : ஸ்டெயின் விளையாட மாட்டார்