‘முதல் போட்டியின் வருமானம் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கே’ – சிஎஸ்கே நிர்வாகம்!

376

ஐ.பி.எல் போட்டிகள் வரும் 23ம் தேதி (மார்ச் 23) தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடக்கவுள்ளது.இதற்கிடையே, சென்னை அணி தங்கள் முதல் போட்டியில் வரும் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து, சென்னை அணி இயக்குநர் ராகேஷ் சிங் கூறுகையில் : முதல் போட்டியில் வரும் நிதி வருமானம் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும். இதனை இராணுவத்தில் கர்னல் பதவியில் உள்ள எங்கள் அணி கேப்டன் ‘மகேந்திர சிங் தோனி’ வழங்குவார் என கூறினார்.

அதன்படி, ஐபிஎல் நிர்வாகம், ஐபிஎல் தொடக்கப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்து, அதற்கு செலவாகும் தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.ஏற்கெனவே, இந்திய அணி சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  IPL 2019 News: சென்னையா? பெங்களூரா? முதல் வெற்றி யாருக்கு?