முதல் ஐ.பி.எல் போட்டி: RCB காலி, CSK ஜாலி!

324

12 வது ஐ.பி.எல் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்.சி.பி மோதின.இதில், டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.ஆர்.சி.பி யில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பார்த்தீவ் படேல் களம் இறங்கினர்.

விராட் கோலி, ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து வெறும் 6(12) ரன்கள் எடுத்து இருந்த நிலையில் வெளியேறினார். மோயின் அலி 9(8), டி. வில்லியர்ஸ் 9 (10), ஹெட்மையர் 0 (2), டூபே 2 (5), க்ராண்ட்ஹோம் 4 (6), சாய்னி 2 (3), சாஹல் 4 (12), உமேஷ் 1 (10), பார்த்தீவ் படேல் மட்டும் இறுதி விக்கெட் வரை விளையாடி 29 (35) ரன்களை எடுத்தார். இறுதியில் RCB அணி 70 ரன்களை மட்டும் எடுத்து 17.1 ஓவரில் ஆல் அவுட்டானது.

71 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணிக்கு, தொடக்க வீரர் ஷேன் வாட்ஸன் 0(10) பந்துகளில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா அதிரடியில் இறங்கினார்.
ஆனால், அவரும் நிலைக்கவில்லை. 19 (21) ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.

ராயுடுவும், கேதர் ஜாதவும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.ராயுடு 28 (42) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் சென்னை அணி 17.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

பாருங்க:  2019 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு!