எம் எஸ் தோனி M S Dhoni என்ற பெவிலியன்

சொந்த மண்ணில் பெவிலியன் திறப்பு விழா! பெருந்தன்மையாக மறுத்த ‘தல தோனி’

ராஞ்ஜியில் நாளை, இந்திய-ஆஸ்திரேலியா இடையே ஆன 3வது ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது. அந்த மைதானத்தில் உள்ள ஒரு பெவிலியனுக்கு எம்.ஸ் தோனி பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதனை திறந்து வைக்கும் விழாவிற்கு தோனியை அழைத்த போது, சொந்த வீட்டை எப்படி நானே திறந்து வைப்பது என கூறி பெருந்தன்மையாக மறுத்துள்ளார்.

உலகக் கோப்பை 2019 தொடருக்கு பின் தோனி ஓய்வு பெற உள்ளார், அதனால் அவரை கவுரவிக்கும் வகையில் எம்.எஸ். தோனி (M.S Dhoni) என்ற பெவிலியன் திறக்கப்படவுள்ளது.

சச்சின் டென்டுல்கர், ஷேவக், சவுரவ் கங்குலியின் பெயர்களில் பெவிலியன் உள்ள நிலையில் ‘மகேந்திரசிங் தோனி’யின் பெயர் பெவிலியனுக்கு சூட்டப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.