சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் நடுவராக தமிழ் பெண்மணி..

325

கிரிக்கெட் உலகின் முதல் பெண் நடுவராக தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ். லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு போட்டுகளை பொறுத்தவரை கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்குத்தான் உலக அளவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில்தான் ஐபில் போட்டி நிறைவடைந்தது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்மணியை முதல் பெண் அம்பயராக ஐசிசி நியமணம் செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் ஆண் அம்பயர்களே களத்தில் இறக்கப்படுவார்கள். இந்நிலையில், முதன் முறையாக தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஜி.எஸ்.லட்சுமி(51) முதல் பெண் அம்பயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லட்சுமி முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். இவருக்கு நாடெங்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  IPL 2019 : புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது டெல்லி அணி!