இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 2 வது ஒரு நாள் போட்டி நேற்று பிற்பல் 1.30 மணியலவில் நாக்பூர் மைதானம் விதர்பாவில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரரான, ரோகித் ஷர்மா சொர்ப்ப ரன்னில் வெளியேற, ஷிகர் தவன், விராட் கோலி ஜோடி இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவன் 21, ராய்டு 18 ல் வெளியேற, விஜய் ஷங்கர், கோலி ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விஜய்ஷங்கர் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். கேதர் ஜாதவ் 11, தோனி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாக, கோலி மட்டும் மறு முனையிலிருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
பின், ஜடேஜா, கோலி ஜோடி இணைந்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோலி ஒரு நாள் அரங்கில் தனது 40 வது சதத்தை பதிவு செய்தார்.
பின் ஜடேஜா 21 ரன்னில் வெளியேற, கோலி 116 ரன் எடுத்திருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பின் வரிசை பேட்ஸ்மேன்கள் எவரும் சோபிக்கவில்லை.இறுதியில் இந்திய அணி, 48.2 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
பின் கலமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின், ஆரம்ப ஆட்டக்காரர்கள், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 83 ரன்கள் எடுத்திருந்த போது முதல் மற்றும் இராண்டாம் விக்கெட் வீழ்ந்தது.
அதிக பட்சமாக ஸ்டாய்னிஸ் 52, ஹான்ட்ஸ்கோம் 48, ஃபின்ச் 38 எடுத்திருந்தனர்.இறுதியில், 49.3 ஒவரில், 242 ரன்கள் எடுத்து ஆல்லவுட் ஆனது.இந்தியா சார்பில், பும்ரா, விஜய் ஷங்கர் தலா 2 விக்கெட்டையும், குல்தீப் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனால், 5 தொடர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டியில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.ஆட்டநாயகன் விருது 116 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.