கேப்டனாக 100 போட்டிகள் வென்ற ‘தல தோனி’! “Yellove100”

444

IPL போட்டிகள் தொடங்கிய ஆண்டில் இருந்து, இதுவரை மாறாமல் கேப்டனாக செயல்பட்டு வரும் ஒரே கேப்டன் M.S.D (சென்னை சூப்பர் கிங்ஸ்). தற்போது, 12வது IPL போட்டிகள் நடந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், தோனி கேப்டனாக, தனது 100வது வெற்றியை பெற்றார்.

அவது 100வது வெற்றியை பாராட்டும் வகையில், CSK நிர்வாகம், “Yellove100” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, 100 விசில்கள் பதியப்பட்ட விருது ஒன்றை வழங்கி தோனியை கௌவுரவப்படுத்தியது.

தற்போது நடந்து வரும், IPL போட்டியில் சென்னை அணி 3 தோல்விகளை மட்டும் அடைந்தது. சென்னை மண்ணில் ஆடிய போட்டிகளில் அனைத்து போட்டியிலுமே வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான ஒரு

போட்டியிலும், தோனி இல்லாத ஹைதாபாத் அணிக்கு எதிரான போட்டியிலும், பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்தது.

தற்போது நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிராக, தோனி அதிரடியாக ஆடி, தனது 100வது வெற்றியை பதிவு செய்தார்.அதை தொடர்ந்து பலரும், தல தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,

தோனியின் மனைவி சாக்ஷி அவர் விருது வாங்கிய புகைப்படத்தை போட்டு, “வாழ்த்துக்கள் தல, விசில் போடு, உங்களுக்கு 100 விசில்கள்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  'முதல் போட்டியின் வருமானம் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கே’ - சிஎஸ்கே நிர்வாகம்!