கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதித்த வாழ்நாள் தடை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

268
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்திற்கு விதித்த வாழ்நாள் தடை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், 2013 ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு டெல்லி போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. பிசிசிஐ யின் முடிவுக்கு எதிராக ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட நாளாக விசாரணையில் இருந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வந்துள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம். ஜோஸப் அளித்த தீர்ப்பில், ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிடுகிறோம்.அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர் மீதான தண்டனையை குறைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். புதிய பரிசீலனைகள் குறித்து நீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ அமைப்பு தெரிவிக்க வேண்டும், என உத்தரவிட்டனர்.

இதுகுறித்து, ஸ்ரீசாந்த் கூறியதில்,

உச்ச நீதிமன்றம் எனக்கு உயிர் கொடுத்து உள்ளது. இந்த தீர்ப்பு இழந்த தன் கௌவுரவத்தை மீட்டு எடுத்துள்ளது. இந்த 6 வருடம் என் வாழ்க்கையான கிரிக்கெட்டை இழந்து இருந்தேன். இனிமேல், என் ப்ரேக்டீஸை தொடங்குவேன் எனவும், மீண்டும் களத்தில் இறங்குவேன் எனவும் நம்பிக்கை உள்ளது, பிசிசிஐ என்னை விளையாட்டு மைதானத்திலாவது களமிறக்கும் என நம்புகிறேன் என அவர் கூறினார்.

பாருங்க:  IPL 2019 : வாட்சன் அதிரடியில் சென்னை அபாரம்! ஹைதராபாத் ஏமாற்றம்!!