காலில் வழியும் ரத்தத்துடன் விளையாடிய வாட்சன் – பாராட்டும் ரசிகர்கள்

312
காலில் வழியும் ரத்தத்துடன் விளையாடிய வாட்சன்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரத்த காயத்துடன் ஷேனே வாட்சன் விளையாடி விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஷானே வாட்சன் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரின் அவுட் ஆன பின்னரே சென்னை சூப்பர் கின்ஸ் அணி தோல்வி பாதையை நோக்கி சென்றது. இந்நிலையில், இந்த போட்டியில் ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடிய விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. ரத்த காயத்துடன் அவர் விளையாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

ரன் எடுக்க ஓடிய போது கீழே விழுந்து அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவர் அவுட் ஆன பின் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு 6 தையல் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  IPL 2019: சுருண்டது டெல்லி! வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!