ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அந்த ஊரிலே வாக்களிக்க அனுமதி!ஸ்வின் வேண்டுகோள்!

329

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக ஏப்ரல் 11 முதல் நடக்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழக வீரருமான ரவிச்சந்திர அஸ்வின் தற்போது ஒரு வேண்டுகோளை பிரதமரிடம் முன் வைத்துள்ளார்.

இந்தியாவில், தற்போது 2019ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்கும் வீரர்கள் தாங்கள் பங்கேற்கும் , பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டி இருக்கும்.

தற்போது, தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டி இருக்கும், அது பலருக்கும் சிரமம் என்பதால், தாங்கள் விளையாடும் ஊரிலே வாக்களிக்க அனுமதி தர கோரி பிரதமரிடம் கேட்டுள்ளார் அஸ்வின்.

மேலும், ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது என்பது அனைவரின் கடமை எனத் தெரிவித்த அவர், மக்கள் சரியான வேட்பாளர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  கோலி அதிரடியால் இந்தியா த்ரில் வெற்றி!