உலக கோப்பையில் விளையாடுவாரா ஜாதவ்? ரிஷப் பண்ட் அல்லது ராயுடு, வாய்ப்பு யாருக்கு?

314

IPL போட்டியின் கடைசி லீக் ஆட்டம் பஞ்சாப் மற்றும் சென்னை அணி இடையே நடைபெற்றது. இதில் ஓவர் த்ரோ, பவுன்டரிக்கு செல்வதை தடுத்த ஜாதவ்விற்கு, தோல்பட்டையில் அடிப்பட்டது. அவர் அப்போதே ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், தனது ட்விட்டர் பக்கத்தில், “இனி ஜாதவ் சென்னை அணியில் விளையாட மாட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் மோசமான நிலை இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜாதவ் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜாதவ் விளையாடிய 14 IPL போட்டியில் 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதனால், கேதர் ஜாதவிற்கு பதில் ரிஷப் பண்ட் அல்லது ராயுடு உலக கோப்பை போட்டியில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று உலக கோப்பை இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. ஏற்கனவே அறிவித்த இந்திய அணியில், எந்த மாற்றமும் இன்றி அறிவித்தது. ஆனால், ஜாதவிற்கு பதிலாக யார் விளையாட போகிறார் என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

பாருங்க:  ஐபிஎல் போட்டிகளை நடத்த ஆசைப்படும் நாடு – பிசிசிஐ பதில் என்ன?