இந்தியா-ஆஸ்திரேலியா 2019

இந்திய அணி படுதோல்வி; ஆஸ்திரேலியா அபாரம்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 3 வது ஒரு நாள் தொடர் நேற்று ராஞ்சியில் நடைப்பெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி ஃபீல்டீங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், ஃபின்ச் மற்றும் கவாஜா இந்திய பந்துவீச்சை தும்சம் செய்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.193 ரன்கள் எடுத்திருந்த போது, ஃபின்ச் தனது 93 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் கவாஜா நிதானமாக ஆடி தனது சதத்தை பதிவு செய்தார்.

அதிக பட்சமாக மேக்ஸ்வெல் 47, ஸ்டாய்னிஸ் 31 ரன்கள் எடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 313/5 எடுத்தது.314 என்ற இலக்குடன் கலமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள், ரோகித்(14), தவன்(1) நிலைக்கவில்லை. அட்டகாசமாக ஆடிய கோலி சதம் விளாசி அசத்த, தனது 123 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் (26) ஏமாற்றினார். கேதர் 26, விஜய் ஷங்கர் 32, ஜடேஜா 24 சோபிக்கவில்லை. இறுதி வரை போராடிய இந்திய அணி 48.2 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனால், 5 ஒரு நாள் தொடரில் இந்தியா 2-1 என்ற செட் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.