இந்திய அணி அசத்தல் வெற்றி! தோனி, ஜாதவ் அபாரம்!!!

500

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் தொடர் நேற்று ஹைதரபாத்தில் நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன், ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். பிறகு இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அதிக பட்சமாக கவாஜா 50 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்திருந்தனர்.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 236/7 எடுத்தது.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி தலா 2 விக்கெட்களையும், ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பிறகு சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர் ஷிகர் தவான் சொர்ப்ப ரன்களிள் வெளியேரி அதிர்ச்சி அளித்தார். பிறகு ரோகித் ஷர்மா 37, விராட் கோலி 44, அம்பதி ராய்டு 13 ரன்களிள் வெளியேற, பின் ஜோடி சேர்ந்த தோனி, ஜாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஏமாற்ற நிலையில் இருந்த இந்திய ரசிகர்கள், இந்த ஜோடியின் அபார ஆட்டாத்தால் நம்பிக்கைப் பெற்றனர்.

48.2 ஓவர்களில் 240/4 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தோனி 59 ரன்களுடனும், ஜாதவ் 81 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேன் ஆஃப் த மேட்ச் பட்டநத்தை கேதர் ஜாநவ் தட்டிச்சென்றார்.

பாருங்க:  ஊரடங்கால் ஆண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை! மாஸ்டர் பிளாஸ்டரின் தனி வழி!
Previous articleபிறந்த குழந்தைக்கு “அபிநந்தன்” பெயரை சூட்டி பெருமிதம் அடைந்த தாய்!
Next articleசிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி, “கின்னஸ் சாதனை”