இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.இப்போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
வழக்கம் போல், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டையை கலப்பினர்.
கவாஜா சதம் விளாச, அதிக பட்சமாக ஹேண்ட்ஸ்கோம்(52), ஃபின்ச்(27), ரிச்சட்ஸன் (29) எடுத்த நிலையில், வேறு எவரும் சோபிக்கவில்லை.இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272/9 ரன்கள் எடுத்திருந்தது.
273 என்ற இலக்குடன் கலமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் 12 ரன்னில் வெளியேற மறுமுனையில் ரோகித் போராடி ரன்கள் குவித்தார். கோலி (20), ரிஷப் பன்ட் (16), விஜய் ஷங்கர் (16)ல் வெளியேற, ரோகித் 89 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார் பின் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், புவனேஷ்வர் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புவனேஷ் (46), ஜாதவ் (44) ரன்களில் வெளியேற, பின் வரிசை ஆட்டக்காரர்கள் எவரும் நிலைக்கவில்லை.
இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.இதனால், 5 ஒரு நாள் தொடரில் 3-2 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில், டி20 தொடரை இழந்த நிலையில் ஒரு நாள் தொடரையும் இந்திய அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.