இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் கலமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 193 ரன்கள் எடுத்திருந்த போது, ரோகித், தான் 95 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
மறுமுனையில், அதிரடியில் ஈடுப்பட்ட ஷிகர் தவன் சதம் அடித்து அசத்தினார். லோகேஷ் ராகுல்(26), விராட் கோலி(7) நிலைக்கவில்லை.ஷிகர் தவன் 143 ரன்களில் வெளியேறினார். ரிஷப் பன்ட் (36), கேதர் ஜாதவ் (10), விஜய் ஷங்கர் (26), புவனேஷ் குமார்(1), பும்ரா(6) ரன்களில் வெளியேர இந்திய அணி 50 ஓவரில் 358 ரன்கள் எடுத்திருந்தது.
359 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் இந்திய பந்துவீச்சை நாற்புரமும் பறக்க விட்டனர். கவாஜா(91), ஹேன்ட்ஸ்கோம்(117), டர்னர்(80) ரன் மழையை பொழிந்தனர்.இந்திய வீரர்கள், ஃபீல்டிங்கில் சொதப்பினர். ரிஷப் பன்ட் ஒரு ஸ்டம்பிங்கை தவர விட்டார். அது போல், ஜாதவ் மற்றும் ஷிகர் தவன் தலா ஒரு கேட்சை மிஸ் பண்ண,இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 359 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கைப்பற்றியது.
இதனால், 5 ஒரு நாள் தொடரில் 2-2 என்ற செட் கணக்கில் இரு அணியும் சமமாக உள்ளது.
5 வது ஒரு நாள் போட்டி மார்ச் 13ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.