23வது ஆசிய விளையாட்டு போட்டிகள், தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 800 மீட்டர் தடகள போட்டியில்,30 வயதான கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் 800 மீட்டர் தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்தினார், கோமதி மாரிமுத்து.இதனால், இந்தியாவிற்கு முதல் தங்கம் பெற்று தந்தார்.
கோமதி மாரிமுத்து, தமிழகத்தை சேர்ந்தவர். இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, சாதாரண விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர். இவர், தன் 20 வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். தற்போது, பெங்களூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘நான் முடிவு கோட்டை முதலில் கடந்து தங்கம் வென்றுள்ளேன் என்பதை நம்பமுடியவில்லை’. கடைசி 150 மீட்டர் கடப்பது கடினமாக இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், இவர் 2013ம் ஆண்டு புனேவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 7வது இடத்தையும், 2015ம் ஆண்டு, சீனாவில் நடைபெற்ற போட்டியில் 4வது இடத்தையும் பிடித்தார், என்பது குறிப்பிடத்தக்கது.