Connect with us

அடுத்த வருடம் இன்னும் உறுதியாக வருவேன் – வீடியோ வெளியிட்ட வாட்சன்

அடுத்த வருடம் இன்னும் உறுதியாக வருவேன்

IPL 2019 News in Tamil

அடுத்த வருடம் இன்னும் உறுதியாக வருவேன் – வீடியோ வெளியிட்ட வாட்சன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஷானே வாட்சன் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரின் அவுட் ஆன பின்னரே சென்னை சூப்பர் கின்ஸ் அணி தோல்வி பாதையை நோக்கி சென்றது. இந்த போட்டியில் ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடிய விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. ரத்த காயத்துடன் அவர் விளையாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது.

https://www.instagram.com/p/Bxg2_a5Ayed/

இந்நிலையில், ஆஸ்திரேலியா திரும்பிய வாட்சன் ‘ரசிகர்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. இறுதிப்போட்டியில் வெற்றியின் பக்கத்தில் சென்று தோல்வியை பெற்றாலும் அது ஒரு சிறந்த ஆட்டமாக இருந்தது. அடுத்த வரும் புதிய ஆற்றலுடன் மீண்டும் வருவேன்’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

பாருங்க:  தோனியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் கொரோனாதான்!

More in IPL 2019 News in Tamil

To Top