சொமாட்டோ ஊழியர் இளம்பெண் விவகாரம்- இளம்பெண் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சொமாட்டோ ஊழியர் இளம்பெண் விவகாரம்- இளம்பெண் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடந்த சில நாட்களாக பெங்களூருவை சேர்ந்த ஜொமட்டோ உணவு ஊழியர் காமராஜின் வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலானதை அறிந்திருப்பீர்கள். பெங்களூருவை சேர்ந்த ஹிதேஷா சந்திரனி, என்ற பெண் தான் ஆர்டர் செய்த உணவு தாமதமாகிவிட்டதால் உணவு கொண்டு வந்த காமராஜ் என்ற டெலிவரி பாயை தாக்க கடைசியாக அவர்தான் தன்னை தாக்கி விட்டார் என அந்த பெண் பொய் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

பின்பு வெளியே வந்த அந்த நபர் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டார் அந்த பெண் தான் தன்னை செருப்பால் அடிக்க வந்ததாக கூறினார். தான் மிகுந்த ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் இப்போது தன்னை ஜொமட்டோ நிறுவனம் வேலையை விட்டு நிறுத்தி விட்டது என்றும் கூறினார்.

இதை பிரபல ஹிந்தி நடிகை பரினிதி சோப்ரா கூட பார்த்து அந்த நபருக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் பொய்யாக புகார் கொடுத்த அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் காமராஜ்க்கு ஆதரவு குவிந்தது. தற்போது அந்த பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.