கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் அதிரடி ஆட்டக்காரனாக விளங்கியவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங் இவரும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். யுவராஜ் சிங் புற்று நோய் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து மீண்டு வந்தார்.
பின்னர் ஒரு சில போட்டிகளில் விளையாடி வந்தார். சில வருடங்களாக இவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் இவர் ஒரு வருடம் முன் சாதி ரீதியாக மேற்கொண்ட பதிவுகளால் சிலர் கோபமடைந்து இவர் மீது வழக்கு பதிந்தனர்.
ஒரு வருடத்துக்கு பின் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் சிங் சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.