cinema news
இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள்
கடந்த 1996ல் வெளிவந்த அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. தமிழ் திரைப்படங்களின் முக்கிய இசையமைப்பாளரான இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தனக்கென தனி பாணியை வகுத்து கொண்டு முன்னணி இசையமைப்பாளராக ஜொலிப்பவர்.
இவர் சிறுவயதாக இருந்தபோதே தந்தை இளையராஜா இசையமைத்த ஆனந்த் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை கம்போஸ் செய்ததாக சொல்வதுண்டு.
யுவன் பாடல்களை கொடுப்பதோடு நின்று விடாமல் சிறப்பான பிஜிஎம்களையும் கொடுப்பவர். அவரது பில்லா , மங்காத்தா பட பிஜிஎம்களை அஜீத் ரசிகர்கள் இன்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர் அந்த அளவு மாஸ் பிஜிஎம்மை கொடுப்பார்.
ராம், பருத்தி வீரன், மெளனம் பேசியதே உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான இசையை வெளிப்படுத்தியவர் யுவன்.
தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து படங்களை தயாரித்தவர் யுவன். 25 வருடங்களாக திரையுலகில் சிறப்பான இசையை கொடுத்து வரும் யுவன் இதுவரை ரஜினி படத்துக்கு இசையமைக்காதது பெரும் குறையே.
இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாள் ஆகும்.