இந்தியாவில் யூ டியூப் மூலம் சம்பாதிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள் என சொல்லலாம். பார்ப்பவர்கள் எல்லாம் யூ டியூப் சானல் ஒன்று வைத்துள்ளார்கள் அதில் ஒரு சிலரே சாதிக்கிறார்கள்.
ஒரு தனியார் சேட்டிலைட் சேனல் பல ஆள் பலத்தோடு சாதிக்கும் நிலையில் பெரிய பின்புலம் இல்லாமல் பெரிய அளவில் பலர் யூ டியூப் மூலம் சாதித்து வருகின்றனர்.
இதன் மூலம் வருமானத்தையும் யூ டியூப் நிறுவனம் அள்ளிக்கொடுத்து வருகிறது.
சமீப காலமாக இந்தியர்களின் யூ டியூப் சானல்களை பாராட்டி வரும் யூ டுயூப் , தினசரி நாளிதழில் யூ டியூப் மூலம் சாதித்து பணமும் ஈட்டி அந்த பணத்தில் கல்வி நிறுவனமும் நடத்தி வரும் ராஜபாளையம் பெண் உட்பட பலரை பாராட்டி முழுப்பக்க விளம்பரமும் கொடுத்து வருகிறது.