தற்போதைய காலத்தில் பலரது பொழுது போக்காக யூ டியூப் சேனல் இருக்கிறது. இதில் தரமான வீடியோக்களை வெளியிட்டு அந்த வீடியோக்கள் ஹிட் ஆனால் அதற்கு ஏற்றார் போல் நம் கைக்கு பணம் வரும் வசதியை யூ டியூப் செய்து வருகிறது
இதன் மூலம் நிறைய குடும்பத்தலைவிகள், வீட்டில் ஓய்வில் இருப்போர் என பலரும் சமையல் வீடியோக்கள் உட்பட பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த ரியான் ஹாஜி என்ற சிறுவன் இந்த 2020ல் மட்டும் 220 கோடி சம்பாதித்துள்ளான்.
மிக ஆச்சரியமான விசயம்தான் இவனுக்கு 10 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுவனின் சேனலுக்கு பல கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

