அடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்

244

திண்டிவனம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. எனவே, இரு வீட்டினரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஜான்சிராணி அருகில் உள்ள ஒரு ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்திற்கு செல்ல சென்னை – திருச்சி ரயில்வே டிராக்கை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில், இன்று காலை செல்போனில் பேசிக்கொண்டே அவர் தண்டாவளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் அவர் மீது வேகமாக மோதியது. இதில், தூக்கி விசப்பட்ட ஜான்சி ராணி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இன்னும் 8 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் ஜான்சிராணி மரணமடைந்தது அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி