Entertainment
யோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இவர் மண்டேலா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படம் இரண்டு கிராம மக்கள் சேர்ந்து தேர்வு செய்யும் கிராம சபை தலைவர் தேர்தலில் ஒருவரின் ஓட்டு வெற்றியாளரின் வெற்றியை தீர்மானிக்கும் கதை இந்த கதை.
பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை பார்த்த ஐபிஎல் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி யோகிபாபுவின் நடிப்பை புகழ்ந்து பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜின் உதவியுடன் யோகிபாபுவை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
