Connect with us

ஒரு வார்த்தையில் நல்லா இல்லை என்று சொன்னவருக்கு யாஷிகா கொடுத்த பதில்

Entertainment

ஒரு வார்த்தையில் நல்லா இல்லை என்று சொன்னவருக்கு யாஷிகா கொடுத்த பதில்

நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது.மிக அழகான தோற்றம் கொண்ட இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் எஸ்.ஜே சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ள ஒரு படம் விரைவில் வர இருக்கிறது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன் ஈஸிஆரில் காரில் செல்லும்போது மிகப்பெரும் விபத்து ஏற்பட்டதில் யாஷிகா பலத்த காயமடைந்தார், உடன் சென்ற இவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார்.

நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த யாஷிகா, தற்போதுதான் லேசாக உடல் நலம் தேறி வழக்கம்போல பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது கவர்ச்சியாக சேலை அணிந்து எப்படி இருக்கிறது என டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், ஒன் வார்ட்ல சொன்னா கேவலமா இருக்கு என சொல்லியுள்ளார், இதற்கு பதிலளித்த யாஷிகா, ஒன்வார்ட்னு சொல்லிட்டு 2 வார்ட் பேசிட்டிங்க என்று கூறியுள்ளார்.

பாருங்க:  நுபுர் சர்மாவுக்கு ஆதரவளித்த கங்கணா ரணாவத்

More in Entertainment

To Top