எனது ரசிகர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருவதால் நானும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் , பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படம் தொடர்பான விழாவில் பேசிய யாஷிகா ‘ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். என் பிறந்தநாளன்று நலதிட்ட உதவிகள் செய்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதைக்கேட்டு நான் எமோஷனல் ஆகிவிட்டேன். கோவையில் என் ரசிகர்களுடன் இணைந்து நானும் சில உதவிகளை செய்துள்ளேன். மக்களிடம் எனக்கு செல்வாக்கு இருப்பதால் எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வந்தே தீருவேன். அதை யாராலும் தடுக்க முடியாது’ எனக் கூறினார்.