கன்னடத்தில் சாதாரணமாக ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த யஷ் தற்போது மிகப்பெரிய நடிகர். இந்தியா முழுமைக்கும் தெரிந்த நடிகராக யஷ் வந்து விட்டார்.
கடந்த தமிழ்ப்புத்தாண்டு அன்று விஜய் நடித்த பீஸ்ட் படத்துடன் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படமும் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெளியானது.
தமிழ்ப்படமான பீஸ்ட் படம் தோல்வியடைந்த நிலையில் கன்னடபடமான கேஜிஎஃப் 2வின் மேக்கிங்கால் அந்த படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. தமிழில் வரலாறு காணாத அளவு திரையிட்ட இடங்களில் எல்லாம் டிக்கெட் கூட கிடைக்காத அளவுக்கு கேஜிஎஃப் 2வுக்கு அதிகமான மக்கள் கூட்டம் இருந்தது உண்மை.
இந்த நிலையில் எல்லா மொழிகளிலும் கேஜிஎஃப்2 வெற்றி பெற்றதால் யஷ் இனி பேன் இந்தியா நடிகர் என்றும் அவர் கன்னட நடிகரோ அல்லது வேறு மொழி நடிகரோ இல்லை. அவர் பேன் இந்தியா நடிகர் அவரால் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க மாட்டார் என கேஜிஎஃப் 2 படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேட்டி அளித்துள்ளார்.