நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் கடந்த 2018ல் வந்தது. மிக பிரமாண்டமாக இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிகர் யாஷ் நடித்திருந்தார். கன்னடம், தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகளில் இப்படம் வெளியானது.
கர்நாடக கோலார் தங்கசுரங்கம் பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் நடித்த நடிகர் யஷ்க்கு இதனால் ரசிகர்கள் பெருகினர்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வர இருக்கிறது. அதாவது வரும் 16ம் தேதி இப்படம் வெளியாவதையொட்டி பிரதமர் மோடிக்கு யஷ் ரசிகர்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில் கேஜிஎஃப் வெளியாவதையொட்டி அந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என யஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியுள்ளனர்.