சமீபத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியில் தமிழ்நாட்டு தலைவர்கள் ஊர்திகள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் கூறப்பட்டது.
இதற்கு மத்திய அரசு பல்வேறு விளக்கங்களை கொடுத்தாலும் சிலர் இந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் மாடுகளும் குரங்குகளும் அணிவகுத்து நிற்கும் குடியரசு தின விழாவில், எங்களின் வேலு நாச்சியார், வ உ சி படங்களை அனுமதிக்காமல் மறுத்த பாரத பிரதமர் மோடிக்கு நன்றி என குஷ்பு சொன்னதாக ஒரு மீடியா செய்தி வெளியிட்டு இருந்தது.
இதை கடுமையாக எதிர்த்துள்ள குஷ்பு இது போன்ற பணம் வாங்கி கொண்டு செய்தி வெளியிடும் மீடியாக்கள் அதிகமாகி விட்டன. என கடுமையாக அந்த மீடியாவை சாடியுள்ளார் குஷ்பு.