சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார்.
ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.
இதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள பாராட்டில் கூறியிருப்பதாவது,
சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த – தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் ப்ரக்யானந்தாவு
-க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என கூறியுள்ளார்.