bus conductor

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காம வெறிபிடித்த கண்டக்டர்

தமிழக அரசு பேருந்தில் தூங்கிய பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்ச்செல்வி (28) என்கிற பெண் மன்னார்குடி செல்வதற்காக கும்பகோணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். நள்ளிரவில்  அவர் தூங்கிக் கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுனர் அவரின் உடலில் கைது வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அவர் திடுக்கிட்டு எழுந்த போது அவரின் இருக்கைக்கு பின்னால் ராஜு அமர்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி ராஜுவின் கன்னத்தில் அறை கொடுத்துள்ளார்.

bus

அதன்பின், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ‘நீ வேண்டுமானால் காவல் நிலைத்தில் புகார் கொடுத்துக் கொள்’ என்று ராஜூ அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து தமிழ்ச்செல்வி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கு முன்பும் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு சமீபத்தில்தான் ராஜூ பணியில் சேர்ந்துள்ளார். தற்போது மீண்டும் அவர் இந்த புகாரில் சிக்கியதால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.