கடக்கும் ரயில்.. தண்டவாளத்தில் மூதாட்டி.. அதிர்ச்சி வீடியோ…

208

ரயில் கடக்கும் போது தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் படுத்து உயிர் தப்பி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுராகி மாவட்டம் சித்தாபுரா பகுதியை சேர்ந்த மூதாட்டி முனிபாய். இவருக்கு வயது 65. இவர் சமீபத்தில் அந்த பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் சென்று, நடை பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால், எதிர்பாரார விதமாக அந்த தண்டவாளத்தில் ஒரு சரக்கு ரயில் வந்துவிட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ரயில் பயணிகள் அவரை பார்த்து கூச்சலிட்டனர். ஆனால், என்ன செய்வதென்று தெரியாமல் அவர் திடீரென தண்டவாளத்திலே படுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர்தப்பினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Courtesy to www.wildfilmsindia.com

பாருங்க:  போலிஸ் முன்பு சிறுவன் போட்ட குத்தாட்டம் - வைரல் வீடியோ