கணவர் செய்த கொடுமை – குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்

182

கணவர் வீட்டார் செய்த சித்ரவதை காரணமாக பெண் ஒருவர் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவாகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. இவரின் மனைவி சீதா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ருத்ரா மற்றும் 4 வயதில் லஸ் என இரு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. மேலும், ராஜுவின் பெற்றோர் சீதாவை வரதட்சனை கொடுமை செய்ததோடு, பல வழிகளில் அவருக்கு மன உளைச்சல் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு ராஜூவும் உடைந்தையாக இருந்ததால் விரக்தியடைந்த சீதா தனது மகன்களை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி தனது இரு மகன்களையும் தூக்கிட்டு கொலை செய்தார். அதன்பின் வேறொரு அறையில் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதோடு, தான் மற்றும் தனது குழந்தைகளின் மரணத்திற்கு தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். எனவே, போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

பாருங்க:  ஏப்ரல் 29 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்