bribe

வட்டார அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி – அதிர்ச்சி வீடியோ

பெண் அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகங்களில் குறிப்பாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிக அளவில் லஞ்சம் புழங்குவதாக பொதுவான புகார் இருக்கிறது. சமீபத்தில் மதுரை வட்டார போக்குவரத்தில் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரில் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு பெண் அதிகாரி ரூ.200 லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால், இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.