national
கள்ளக்காதலி வீட்டில் உல்லாசம் – கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி
கள்ளக்காதலி விட்டில் உல்லாசமாக இருந்த கணவனை அவரின் மனைவி கையும் களவுமாக பிடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Wife caught Husband illegal love issue – ஹைதராபாத்தில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு எஸ்தர் ஏஞ்சல் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக கோபால் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்கிற சந்தேகம் எஸ்தருக்கு இருந்து வந்தது. எனவே, அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட எஸ்தர், கணவர் வெளியே சென்ற போது அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்தார். அப்போது அவர் ஹைதராபாத் அல்வால் சுபாஷ் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்.
எனவே, அங்கு அவர் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தி வருவதை தெரிந்து கொண்ட எஸ்தர், உறவினர்களுடன் அங்கு சென்று கணவனை கையும் களவுமாக பிடித்தார். மேலும், அவரை சரமாரியாக தாக்கினார். செருப்பால் அடித்தார். அதன்பின் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.