இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? – பிக்பாஸ் அப்டேட்

223

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது பற்றிய தகவல் வெளியே கசிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. பினாலே டாஸ்க் மூலம் நேரடியாக ஒரு போட்டியாளர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே அதை நோக்கி எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் கவின், லாஸ்லியான் சேரன், ஷெரின் ஆகிய நால்வரில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்பட உள்ளார்.

அதற்கான வாக்கெடுப்பும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவின் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்திலும், சேரன் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் லாஸ்லியா மூன்றாம் இடத்திலும், குறைவான வாக்குகளை பெற்று நடிகை ஷெரின் நான்காம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, அதன் அடிப்படையில் ஷெரின் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், பினாலே டாஸ்கில் ஷெரின் நன்றாக விளையாடி அதிக புள்ளிகளை பெற்றுவருகிறார். எனவே யார் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்பதில் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

பாருங்க:  கையை இப்படியா அறுத்துக்கொண்டார் மதுமிதா? - அதிர்ச்சி புகைப்படம்