Entertainment
வாட்ஸப் யூஸ் செய்பவர்களா கொஞ்சம் உஷாரா இருங்க
பிங்க் வாட்ஸ் அப் அப்டேட் என்ற இணைப்பின் மூலம் செல்போன்களில் வைரஸ் பரப்புவது குறித்து சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் , வாட்ஸ்அப் பிங்க் வாட்ஸ் அப்பாக மாறும் என்றும் அதில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் அது உங்கள் மொபைல் போனுக்கு ஆபத்தாக முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ அப்டேட் போன்றது என்று லிங்கில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதன் இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, சம்பந்தப்பட்ட பயனரின் செல்போன் ஹேக் செய்யப்படும், மேலும் அவர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த கூட முடியாமல் போகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் செக்யூரிட்டி நிபுணர் ராஜசேகர் ராஜாரியா சமூக ஊடகங்களில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “வாட்ஸ்அப் பிங்க் குறித்து கவனமாக இருங்கள்! APK பதிவிறக்க இணைப்புடன் வாட்ஸ் அப் குழு வைரஸை பரப்ப முயற்சிக்கிறது. வாட்ஸ் அப் பிங்க் என்ற பெயருடன் எந்த இணைப்பு வந்தாலும் அதனை கிளிக் செய்ய வேண்டாம். இணைப்பைக் கிளிக் செய்தால் செல்போன் ஹேக் செய்யப்படும், பின்னர் அதனை பயன்படுத்துவது கடினம். என்று தெரிவித்துள்ளார்.
அதனால் அது போன்ற இணைப்புகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.