உலமெங்கும் தற்போதுயுள்ள தொழில்நுட்பம் வளர்ச்சியில் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த செயலிகளை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம், அவற்றில் வாட்ஸ் அப்பும் ஒன்று. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ் அப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது.
இதனை தவிர்த்து, வாட்ஸ் அப்பில் சாட்ஸ், ஸ்டேட்டஸ், கால்ஸ் என்ற பகுதிகளும் உள்ளது. அவற்றில் குறிப்பாக ஸ்டேட்டஸ் பகுதியை தினந்தோறும் பல்வேறு பயனாளிகள் தங்களுக்கு பிடித்த போட்டோகள், வீடியோகள், பாடல்களை பதிவுட்டுவருகின்றனர். இதில் ஸ்டேட்டஸ் என்ற பகுதியில் வீடியோ கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு மீண்டும் 30 விநாடிகள் வரை நீட்டிப்பு. ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை 15 விநாடிகளில் இருந்து 30 விநாடிகளாக மீண்டும் உயர்த்தியுள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய நேர அளவை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.