திருமண புகைப்படங்கள் என்ற பெயரில் கொடூரங்களை செய்பவர்கள்

திருமண புகைப்படங்கள் என்ற பெயரில் கொடூரங்களை செய்பவர்கள்

ஒவ்வொரு திருமணத்திலும் வந்திருந்து வாழ்த்துபவர்களையும் , உறவினர்கள், நண்பர்களையும் முக்கியமாக திருமணத்தையும் புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்களின் உதவி தேவைப்படுகிறது.

திருமணம் முடிந்த உடன் மாப்பிள்ளை மற்றும் பெண்ணை அழைத்துக்கொண்டு எங்காவது அவுட்டோரில் வைத்து இண்டியூஜுவல் ஷூட் எனும் பெண், மாப்பிள்ளையை ஹீரோ, ஹீரோயின் போல காண்பிக்கும் தனி புகைப்படங்களை எடுப்பார்கள்.

இது நாகரீகம் என்ற பெயரில் பெண்ணை அரை நிர்வாணமாக கவர்ச்சியாக காண்பிப்பது போல் எல்லாம் இண்டியூஜுவல் ஷூட் எடுப்பதை சில தரம் குறைந்த புகைப்படக்கார்கள் சமீபகாலமாக வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

நவீன விசயங்களில் மூழ்கிப்போன பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு சம்மதித்து விடுவது அதை விட கொடுமை.

சேருக்குள் விழுவது சகதிக்குள் புரளுவது என எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் புகைப்படக்கார்கள் புதிதாக தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படக்காரர்கள் ஏதோ திகில் பட போஸ்டர் ரேஞ்சில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இது சமூக வலைதளங்களை சுற்றி வருகிறது. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ.

திருமணம் ஒரு மங்களகரமான நிகழ்வு இவ்வளவு மோசமாக அழுகை, கண்ணீர் கம்பலையுமாக புகைப்படம் எடுப்பது மிக அருவறுக்கத்தக்க செயல் போட்டோகிராஃபியையே அசிங்கப்படுத்தும் செயலாகும்.