Entertainment
திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை மாப்பிள்ளை கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்- உறவுக்காரர் திடீர் மாப்பிள்ளையானார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது.
முதல் நாள் பாட்டுக்கச்சேரி நடந்தது அப்போது மாப்பிள்ளை, பெண் இருவரும் ஜோடியாக ஆடினர். அப்போது பெண்ணின் உறவுக்கார பையன் ஒருவர் அவருடன் சேர்ந்து ஆடினார்.
அந்த பையன் அவருக்கு உறவினர் என்றாலும் சகோதரர் முறைதான். இதை தவறாக புரிந்து கொண்ட மணமகன் உடனே பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் உடனே திருமணத்தை நிறுத்துமாறு கோரினார். இப்பவே இப்படி அடிக்கிறார் இவருடன் வாழமுடியாது என்ற உடன். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் உடனே சமாதானம் செய்து பார்த்தனர் . மாப்பிள்ளையும் தன் தவறை உணர்ந்து பெண்ணின் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு பார்த்தார்.
பின்பு அனைவரும் திருமண மண்டபத்தை காலி செய்து விட்டு சென்றனர். உடனே அந்த பெண்ணின் உறவுக்கார பையன் தேர்வு செய்யப்பட்டு அடுத்த நாளே பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
